Selvamanokaran, T.(Eastern University, Sri Lanka, 2021-11)
காலனிய, பின்காலனிய காலங்களினூடாக வளர்முக நாடுகள் உலகமயமாதலுக்கு உள்ளாக்கப்பட்டன. அவை தாமாகவே உலகமயமாதலுக்கு உள்ளாகியும் வருகின்றன. பொருளாதாரச் செயல் நிலையை அடிப்படையாகக் கொண்டதாக உலகமயமாதல் நிகழ்ந்திருந்தாலும் அது உலகநாடுகளை ...
இந்திய மண்ணில் தோற்றம் பெற்ற தொன்மைச் சமயங்களில் ஒன்றான சைவத்தின் தொன்மைப் பிரிவுகளில் ஒன்று வைரவம். இது வடநாட்டில் தோற்றம் பெற்றதாகவே பெரிதும் நம்பப்படுகிறது. காவல் தெய்வமாகச் சித்தரிக்கப்படும் வைரவர், வைரவர், வடுகர் போன்ற ...
நவீன தமிழ் இலக்கிய வடிவங்களுள் ஈழத்தில் அதிக வீச்சோடு இயங்கி வருவது கவிதையாகும். ஈழத்தின் வடபுலத்தில் உள்ளடங்கும் வன்னி, யாழ்ப்பாண பிரதேசங்களில் இப்புதிய நூற்றாண்டில் பல கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. அவை சுய ...
குறித்த ஒரு இனம் தன்னடையாளத்தைத் தொலைக்காது இருப்பதற்கு தனக்கான மொழிஇ சமயம்இ தத்துவம், கலை, இலக்கியம், பண்பாடு உள்ளிட்டவற்றைப் பாதுகாத்தல் அவசியமாகும். காலனித்துவக் கால ஒடுக்குமுறைக்குள் இருந்து சைவத்தையும் தமிழையும் ...
காலனித்துவ கால ஈழத்து தமிழ், சைவ மறுமலர்ச்சியில் முக்கிய பங்காற்றியவராக ஆறுமுகநாவலர் கருதப்படுகிறார். பதிப்பியல், நூலாக்கவியல், உரைநடையியல், செய்யுளியல், பிரசங்கவியல், கல்வியியல், சமயவியல், தத்துவவியல், இலக்கணவியல் எனப் ...
சைவ சமய வரலாற்றில் தமிழ் பக்தி இலக்கியங்களுக்கு தனியிடம் வழங்கப்படுகிறது. சித்தாந்த சாத்திரங்களுக்கு – அவற்றின் உருவாக்கத்துக்கான முக்கோளாக பக்திஇலக்கியங்கள் திகழ்ந்தன என்றே கருதப்படுகிறது. அந்த நாயன்மார் பாடல்களைத் தேடித் ...
சைவ சமய பக்திப் பனுவல்களுள் அடங்கன் முறை எனச் சிறப்பிக்கப்படும் தேவாரங்களுக்குத் தனியிடமுண்டு. சைவத்தின் சமய, சமூக, தத்துவ வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் காரணமாகவும் தமிழ் நாட்டில் அவைதீக நெறிகளிடமிருந்து மக்களையும் ...
தமிழகம் சமண, பௌத்த சமயங்களின் ஆளுகைக்கும் அந்நியராட்சிக்கும் உட்பட்டிருந்த காலத்தில் சைவ, வைணவ பக்தியிலக்கியங்கள் உருவாகி அவற்றுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தன. அவைதிக சமயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்த்துப் ...
சைவத்திருமுறைகளுள் ஒன்றாகவும்; சைவசித்தாந்த மரபில் முக்கிய நூலாகவும் கருதப்படுவது திருமூலரின் திருமந்திரம் ஆகும். தமிழ்மூவாயிரம், தமிழாகமம் எனச் சிறப்பிக்கப்படும் இந்நூல் ஒன்பது தந்திரங்களையும் மூவாயிரம் பாடல்களையும் ...
தமிழின் தொன்மை இலக்கியங்களுள் திருக்குறளும் ஒன்றாகும். தமிழர் மெய்யியற் செல்நெறியில் மணிமேகலையை அடுத்து தனக்கான தனித்துவமான மெய்யியற் பண்பை உடைய நூலாகத் திருக்குறளைச் சுட்டலாம். மெய்யியல் என்பது தமிழில் மெய்ஞ்ஞானம் தத்துவம் ...
சைவசித்தாந்தம் இந்திய மெய்யியற் பரப்பில் தனக்கான தனியிடத்தைக் கொண்ட ஒரு தத்துவம் ஆகும். இலங்கைவாழ் சைவர்கள் பின்பற்றும் பெருந்தத்துவமாக இது திகழ்கிறது. இச்சைவசித்தாந்த செல்நெறியின் இருண்ட காலமாகத் திகழும் காலனித்துவ ...
ஈழத்து சைவ மரபு தனக்கான தனித்துவ பாரம்பரியத்தையுடையது. ஆறுமுக நாவலரின் மரணத்தின் பின் நிகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் வருகை மற்றும் அவரது கருத்தியல் ஈழத்துச் சைவ மரபில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தியது என்பதையும் மிண்டிய ...
நவீன தமிழ் இலக்கியப்பரப்பில் ஈழத்து இலக்கியவாதிகளுக்குத் தனித்த இடமுண்டு. பதிப்பு, உரைநடை, இலக்கிய வரலாறு எழுதுதல், இலக்கணவிளக்கம் எனப் பல தளங்களில் முன்னோடித் தன்மையும் காத்திரமான பங்களிப்பும் தொடரியங்கலும் ஈழத்தவருக்குண்டு. ...
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட நவீன கல்விவிருத்தி, ஆங்கில அறிவு என்பவற்றின் வழி உருவான புதிய அறிவார்ந்த ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தன்னடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அச்செயற்பாடுகளில் ஒன்றாக நூற்பதிப்பு ...
பாரம்பரியத்தை வளர்க்க அரும்பாடுபட்டனர். அச்சிந்தனை ஈழத்து நவீன சைவக்கல்விப் பாரம்பரியம் வழி சைவப்பாடசாலைகள் உருவாக்கம் பெற்றன. அங்கு ஆறுமுகநாவலருடன் தொடங்குகின்றது. அவரின் கற்பிக்க கிறிஸ்தவ ஆசிரியர்களையே நம்பியிருக்க ...
மெய்யியல் என்பது அறிவாராய்ச்சியியலின் பாற்பட்டது. அறிவாராய்ச்சியியல் தருக்கத்தின் பாற்பட்டது. தருக்கம் வாதத்தின் வழி கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு விடயம் அல்லது பொருள் பற்றி இருவருக்கிடையில் நடைபெறுவது வாதம் எனப்படும். இது ...