Abstract:
சைவசித்தாந்தம் இந்திய மெய்யியற் பரப்பில் தனக்கான தனியிடத்தைக் கொண்ட ஒரு தத்துவம் ஆகும். இலங்கைவாழ் சைவர்கள் பின்பற்றும் பெருந்தத்துவமாக இது திகழ்கிறது. இச்சைவசித்தாந்த செல்நெறியின் இருண்ட காலமாகத் திகழும் காலனித்துவ ஆட்சிக்காலப்பகுதியில் அதனை மீட்டுருவாக்கம் செய்ய எழுந்த அறிஞர்களுள் இலங்கையர்களும் கணிசமானவராவர். அவர்களுள் சிவசங்கர பண்டிதருக்குத் தனியிடம் உண்டு. அவரெழுதிய சைவப்பிரகாசனம் தமிழில் எழுந்த சைவசித்தாந்த தர்க்கவியல் சார்ந்த முதல் உரைநடை நூலாகும். அதனைப் பகுப்பாய்வு, விவரணம் எனும் ஆய்வு முறையியல்களினூடு இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.