Abstract:
சைவத்திருமுறைகளுள் ஒன்றாகவும்; சைவசித்தாந்த மரபில் முக்கிய நூலாகவும் கருதப்படுவது திருமூலரின் திருமந்திரம் ஆகும். தமிழ்மூவாயிரம், தமிழாகமம் எனச் சிறப்பிக்கப்படும் இந்நூல் ஒன்பது தந்திரங்களையும் மூவாயிரம் பாடல்களையும் கொண்டிலங்கிறது. இதன் காலம் பற்றிய ஆய்வு முடிவுறவில்லை. சைவமரபில் முதன்மையுறும் அடியார் வழிபாடாகிய சங்கம வழிபாடு விடுதலைக்கு உரிய ஒரு வழியாக எடுத்துரைக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆய்வு திருமந்திரத்தில் சங்கம வழிபாடு பற்றி கூறப்பட்ட கருத்துக்களை ஆராய்கிறது. தமிழில் சங்கமம் என்ற சொல்லின் பயில்நிலை, வீரசைவ மரபின் சங்கம வழிபாடு பற்றியும் அதற்குப் பதிலீடாக அடியார், அணைந்தார் முதலான சொற்பண்பாடு பற்றியும் இவ்வாய்வு எடுத்துரைக்கிறது. சைவம் அடியாருக்கும் அடியார் வழிபாட்டுக்கும் கொடுக்கும் இடத்தை ஆய்வுப்பிரச்சனையாகக் கொண்டு அதனை திருமந்திரத்தின் ஊடாக ஆராய்வதாக இந்த ஆய்வு விளங்குகிறது. அதற்கு விவரணம், ஒப்பீடு முதலான ஆய்வு முறையியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.