Abstract:
மெய்யியல் என்பது அறிவாராய்ச்சியியலின் பாற்பட்டது. அறிவாராய்ச்சியியல் தருக்கத்தின் பாற்பட்டது. தருக்கம் வாதத்தின் வழி கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு விடயம் அல்லது பொருள் பற்றி இருவருக்கிடையில் நடைபெறுவது வாதம் எனப்படும். இது விவாதமாக, பட்டிமண்டபமாக, வழக்காடலாக வளர்ச்சியுற்றுக் காணப்படுகிறது. இந்து அறிவாராய்ச்சியியலை வாதம் பற்றிய தெளிவான கருத்தை நியாயதரிசனமே முன்வைத்தது. சைவசித்தாந்த உரையாசிரியர்கள் பிறசமய - மெய்யியல் நிராகரணங்களுக்கும் தம் சமய, தத்துவ கருத்துக்களை நிலை நிறுத்தும் வாதத்தை வெற்றிபெற கதை உக்திகள் பயன்பட்டன. அதேவேளை இதனை சரிவரப்பயன்படுத்தாதவர் தோல்வித்தானத்தை எய்தினர். அந்தவகையில் அறிவாராய்ச்சியியல் செல்நெறியின் வகிபாகத்தை இவ்வாய்வு மதிப்பிடுகிறது.