Abstract:
ஈழத்து சைவ மரபு தனக்கான தனித்துவ பாரம்பரியத்தையுடையது. ஆறுமுக நாவலரின் மரணத்தின் பின் நிகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் வருகை மற்றும் அவரது கருத்தியல் ஈழத்துச் சைவ மரபில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்தியது என்பதையும் மிண்டிய மாயாவாதம் என மறுக்கப்பட்ட வதாந்தததைப் பேசிய விவேகானந்தர் எவ்வாறு ஈழத்துச் சைவ மரபினரிடம் இன்றுவரை செல்வாக்கு செலுத்துகின்றார் என்பதையும் இக்கட்டுரை ஆய்வுக்குட்படுத்துகிறது.