Abstract:
இலங்கையின் 20ம் நூற்றாண்டில் கலை வடிவங்கள் யாவும் தமது பாரம்பரிய கலை மரபுகளில் இருந்து விடுபட்டு புதிய கலை மரபுகளிற்குள் ஊடுருவிச் செல்கின்றன. இங்கு ஓவியக்கலையானது புதிய கோணங்களை நாடிச் செல்லும், ஆக்கபூர்வ உணர்வு வெளிப்பாடுகளைக் கொண்டமைந்த, ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கும் படைப்புக்களாக வெளிப்படுத்தப்படுகின்றது. இந்த நவீன கலை வரவுகளை ஊக்கப்படுத்தும் செயற்பாட்டினை உலகமயமாதலின் பின்னணியில் அவதானிக்க முடியும். இதனை இலங்கையில் மாறுபட்ட முறைகளில் அமைந்த ஓவியக்கலைப்படைப்புக்களின் வெளிப்பாடுகளின் ஊடாக இனங்காண முடியும். இலங்கையின் 20ம் நூற்றாண்டு ஓவியக்கலை கட்டுப்பாடுகளற்ற ஓவியப்பரப்பு விஸ்தீரணத்தின் உருவாக்கத்தில் தோன்றுவதற்கு, உலகமயமாதலின் செயற்பாடுகளே முக்கிய காரணியாக விளங்குகின்றமையை இந்த ஆய்வுக் கட்டுரையின் மூலம் சுட்டிக்காட்ட முடியும்.