Abstract:
பொதுக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரிய கல்வியியலாளர்கள் ஆகியோர், தொடர்ச்சியாக செயல்நிலை ஆய்வில் ஈடுபட்டிருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. துரதிஸ்டவசமாக இலங்கையில் கல்வித்துறை ஆளணியினர் செயல்நிலை ஆய்வு தொடர்பான பாண்டித்தியம் குறைந்தவர்களாக காணப்படுகின்றனர். மேலும் இவர்களுக்கு அளவைநிலை ஆய்விற்கும் (ளுரசஎநல சநளநயசஉh) செயல்நிலை ஆய்விற்கும் (யுஉவழைn சநளநயசஉh) இடையிலான வேறுபாடுகளையும் தெளிவாக புரிந்துகொள்ளும் ஆற்றலும் குறைவாக காணப்பட்டது. இதனை உணர்ந்து கிளிநொச்சி கல்விவலய கல்விசார் அலுவலர்களிடையே செயல்நிலை ஆய்வுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கோடு இந்த செயல்நிலை ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. இங்கு பரிசோதனை வடிவமைப்பில் பங்குபற்றல் செயல்நிலை ஆய்வுமுறை பயன்படுத்தப்பட்டது. இதில் கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களைச் சேர்ந்த 04 அதிபர்கள், 08 சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் உள்ளடங்கலாக 24 கல்விசார் அலுவலர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த ஆய்வின் ஆய்வாளர்கள், வளவாளர்களாக பங்குகொண்டிருந்தனர். செயலமர்வு, வழிகாட்டல், முன்வைப்பு மற்றும் களவிஐயம் ஆகிய தலையீட்டுச்செயற்பாடுகளின் பி;ன்னர் கல்விசார் அலுவலர்களின் செயல்நிலை ஆய்வு தொடர்பான அடிப்படை அறிவு மேம்பட்டிருந்ததை அவர்களி;ன் தொடர் ஆய்வுச் செயற்பாடுகள் ஒவ்வொன்றி;ன் மூலமும் இனங்கண்டுகொள்ள முடிந்தது. அளவைநிலை ஆய்வுச்செயன்முறைக்கும் செயல்நிலை ஆய்வுச்செயன்முறைக்கும் இடையிலான வேறுபாடுகளை தெளிவாக இனங்கண்டுகொண்டுள்னர். தமக்கும் தாம் பணியாற்றும் பாடசாலை மற்றும் கல்விவலயத்திற்கு பொருத்தமான செயல்நிலை ஆய்வுத்தலைப்பை தெரிவுசெய்திருந்தனர். தமது செயல்நிலை ஆய்வில், புத்தாக்கமான தலையீட்டுச் செயற்பாட்டை (ஐnழெஎயவiஎந iவெநசஎநவெழைn) மேற்கொண்டிருந்தனர். தமது செயல்நிலை ஆய்வை, சிறப்பாக அறிக்கைப்படுத்தியிருந்ததுடன் தமது செயல்நிலை ஆய்வு முடிவுகளை சிறப்பாக முன்வைத்திருந்தனர்