DSpace Repository

பிரித்தானியர் கால நல்லூர்: ஒரு நோக்கு

Show simple item record

dc.contributor.author Sathyaseelan, S.
dc.date.accessioned 2022-12-08T05:01:08Z
dc.date.available 2022-12-08T05:01:08Z
dc.date.issued 1993
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8767
dc.description.abstract பிரித்தானியர் ஆதிக்கம் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் 1796 இல் ஆங்கிலக் கடற் படைத் தளபதியான ஜேம்ஸ் ஸ்ருவார்ட் பருத்தித்துறையில் இறங்கி மிக விரைவிலே யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டதிலிருந்து ஆரம்பமாயிற்று. இவ் வகையில் யாழ்ப்பாண மக்களின் பிரதான மைய இடமாகக் காணப்பட்ட நல்லூர்ப் பிரதேசமும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட் டது. ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிக் காலத் திலே ஐரோப்பிய அரசியல் நிலைமைகளின் விளைவாக அவர்கள் ஆதிக்கம் இப்பிரதே சத்திலும் தளர்வடையலாயிற்று. அதனால் இதுவரை அவர்கள் பின்பற்றிவந்த புரட்டஸ் தாந்த கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவான கொள்கையிலும் தளர்வு ஏற்படலாயிற்று. இதனால் நல்லூரையும், அதனைச் சுற்றியும் காணப்பட்ட பழைய வழிபாட்டிடங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டுத் தடை செய் யப்பட்டிருந்த இந்துமத வழிபாட்டு முறை மைகள் வளர்ச்சி அடையாலாயின. இத்த கைய ஒரு பின்னணியிலே பிரித்தானியர் ஆதிக்கம் இப்பிரதேசத்தில் ஏற்பட்ட போது அவர்கள் பின்பற்றிய மதக் கொள்கை ஒல் லாந்தர் ஆட்சியின் இறுதியிலே இடம் பெற்ற இந்துமத வழிபாட்டு முறைமைக்கு மேலும் உத்வேகத்தை அளிப்பதாக அமைந் தது. குடிமக்கள் யாவரும் அவரவர் விரும் பிய மதத்தைப் பின்பற்றலாம் என்ற ஆங்கி லேயரின் கொள்கையினால் மக்களிடையே இந்துமதத்தைப் பின்பற்றுவதிலே தீவிர ஆர்வம் காட்டப்பட்டது, மதச் சுதந்திரம் வழங்கப்பட்டமையினால் முன்பு அரசின் கட்டாயத்தின் பேரிலும், உதவிகளைப்பெறும் வகையிலும் கிறிஸ்தவர்களாய் மதம் மாறியஅனேகர் அம்மார்க்கத்தைக் கைவிட்டு இந்து சமய ஆசாரங்களை வெளிப்படை யாக அனுசரிக்கத் தொடங்கினர். முன் னர் இடிக்கப்பட்டிருந்த இந்து ஆலயங்க ளைத் திரும்பக் கட்டவும், உபயோகிக்கப் படாமற் பாழாய்க் கிடந்த ஆலயங்களைப் புதுபித்து உபயோகிக்கவும், முன்னே பதுங்கி ஒதுங்கி அந்தரங்கத்திற் செய்து வந்த ஆசார,நியம நிட்டைகளைப் பகிரங்கத்திற் செய்யவும் மக்கள் தலைப்பட்டனர். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title பிரித்தானியர் கால நல்லூர்: ஒரு நோக்கு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record