Abstract:
உலகிலே சில மொழிகள் எழுத்து மைகள் யாவை எனக் காண்பதே இவ்வழக்கு, பேச்சு வழக்கு என இரு பெரும் வழக்கினைக் கொண்டவை. இவ்விரு வழக்குகளும் அமைப்பிலே வேறுபடுபவை. இம் மொழிகளில் பேச்சு வழக்கினை அறிந்த ஒருவர் எழுத்து வழக்கினைச் சம்பிரதாயப் படி சுற்றே அறிந்து கொள்ள முடியும். இரு வழக்குகள் கொண்ட மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்றாகும். எழுத்துத் தமிழும், பேச்சுத் தமிழும் இலக்கண அமை புக்களில் பெரிதும் வேறுபடுகின்றன. இவ் வேறுபாடுகளை ஒப்பிட்டு ஆராய்வது பய னுள்ள முயற்சியாகும். ஒப்பிட்டு ஆராய் வதன் மூலம் இரு வழக்குகளின் தன்மை, போக்கு, வரலாறு முதலியனபற்றி அறிந்து கொள்ளலாம். தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பேசும் மாணவர் களுக்கு எழுத்து வழக்கைக் கற்பிக்கும் போது து கற்றலிலும், கற்பித்தலிலும் எழும் சிக்கல்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். ஒப்பிட்டு ஆராய்வதற்கு முதலில் இருவழக்குகளின் அமைப்புக்களைத் தனித் தனியே விளக்குதல் வேண்டும். அதன் பின்னரே ஒப்பிட்டு ஆராய்தல் கூடும்
தமிழ் மொழி எழுத்து வழக்கில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக் காலங்கள் உண்டு; இதேபோன்று பேச்சு வழக்கிலும் இம் முக்காலங்களும் உண்டு. ஆயின் இரு வழக்குகளிலும் காலங்களின் அமைப்பு மிக வேறுபடுகின்றது. யாழ்ப் பாணத் தமிழ்ப் பேச்சு வழக்கில் இறந்த கால அமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது.