dc.description.abstract |
ஒரு சமூகத்தின் வளர்ச்சியானது அதன் கல்வி வளர்ச்சியில் தங்கியுள்ளது. இக் கல்வி வளர்ச்சி வரலாற்றின் ஆரம்பப் படியினை ஆராயின், அங்கு அறிவுவளர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி என்ற வகையில்தான் கல்வியின் நோக்கங்களுக்கு அழுத்தங் கொடுக்கப்பட் டது. ஆங்கு விஞ்ஞானக் கல்வி என்னும் நிலை அன்று காணப்படவில்லை. பின்னைய காலகட்டங்களில், குறிப்பாகப் பரிசோதனை யுகத்தைத் தொடர்ந்த காலகட்டத்தில் விஞ்ஞான அறிவும், விஞ்ஞான ஆராய்ச்சி களும் சமூகத்தில் மிளிரத் தொடங்கவே விஞ்ஞானக் கல்வியின் தேவை சமூகத்தில் பரவலாக உணரப்படலாயிற்று. அதன் விளைவாகவே இன்று பாடசாலை எனும் நிறுவன அமைப்புக்கூடாக அடிப்படை விஞ் ஞான அறிவேனும் வழங்கப்படும் நிலை காணப்படுகிறது. அதுமட்டுமல்ல பாடசா லையில் கற்கும் சகல மாணவரும் இவ் அடிப்படை அறிவைப் பெறும் வாய்ப்பும் கிடைக்கின்றது. |
en_US |