dc.description.abstract |
ஒல்லாந்தரின் மேலாட்சிக் காலத்திற் இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன. குரிய (1658 - 1796 ) அடங்காப்பற்று வன்னிமைகளின் வரலாற்றைப் பொறுத்த வரையிலே தேசாதிபதிகள், கொம்மாந் தர்கள் போன்ற உயரதிகாரிகள் எழுதிய அறிக்கைகளே பிரதான வரலாற்று மூலங் களாக அமைகின்றன. அவற்றில் அடங் காப்பற்றிலுள்ள வன்னிப்பிரிவுகள், அவற் றுக்குப் பொறுப்பாகவிருந்த வன்னியர்கள், வன்னியருக்கிடையில் நிலவிய உறவுகள் கொம்பனி அரசாங்கத்திற்கும் வன்னியர் களுக்கும் இடையிலுள்ள தொடர்புகள் போன்ற விடயங்களைப் பற்றி விரிவான குறிப்புகளும் அரிய சான்றுகளும் இடப் பெற்றுள்ளன. 1 ஆயினும் குறிப்பிட்ட சில காலப்பகுதிகளைப் பொறுத்த வரையில் இத்தகைய ஆவணங்கள் கிடைக்கவில்லை. கெந்திரிக்கு வெக்கர்,(Hendrick Becker } 1709- 1716, ஜான் சுரோய்டர்,(Jan Schreuder ) 17 56 - 1762, ஆகியோரின் காலங்களுக்கு இடைப்பட்ட தேசாதிபதி களின் அறிக்கைகளிலே வன்னிமைகளைப் பற்றிய விபரங்கள் இடப் பெறவில்லை. அதனாற் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த வன்னிமைகளின் வரலாறு இதுவரை அறியப்படாதவொன் றாக இருந்து வந்துள்ளது. |
en_US |