dc.contributor.author | Pathmanathan, S. | |
dc.date.accessioned | 2022-12-08T04:31:17Z | |
dc.date.available | 2022-12-08T04:31:17Z | |
dc.date.issued | 1993 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8756 | |
dc.description.abstract | ஈழத்து வன்னிமைகளைப்பற்றி இது வரை மூன்று சாசனங்கள் கிடைத்துள்ளன. அம்மூன்றும் தமிழ்மொழியில் எழுதப்பட் டுள்ளன. அவற்றுள் கங்குவேலிக் கல்வெட்டு, வெருகற் கல்வெட்டு ஆகியவிரண்டும் சிலா சாசனங்களாகும்.1 மற்றையது கயிலாய வன்னியனார் மடதர்ம சாதனப் பட்டை யம்' என்ற செப்பேடாகும்.2 மலையில் வன்னியனாரும் ஏழூர் அடப்பர்களுங் கூடித் 'தம்பிரானார் கோணைநாதனுக்கு' தானம் கொடுத்தமைபற்றிக் கங்குவேலிக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. வெருகற் கல்வெட்டானது (சித்திர வேலாயுத சுவாமி) கோயிலின் தெற்குமதில் கயில வன்னிய னார் உபயம் எனக் குறிப்பிடுகின்றது. வெருகற் கல்வெட்டிலே அது எப்போது எழு தப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. அதன் வரிவடிவ அமைப்பினைக் கொண்டு அது பதினாறாம் நூற்றாண்டிற்குரிய தென்று கூறப்பட்டுள்ளது. ஆயினும் வெரு கற் கல்வெட்டுக் குறிப்பிடும் கயில வன்னி யனார் எக்காலத்திற்குரியவர், எப்பகுதிகளிலே வன்னிபமாய் விளங்கினார் என்பவை ஆராய்தற்குரிய விடயங்களாகும். | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.title | கயிலாய வன்னியனார் மட தர்மசாதனப் பட்டையம் சில வரலாற்றுக் குறிப்புக்கள் | en_US |
dc.type | Article | en_US |