Abstract:
இலங்கையின் அமைவிடம், இயற்கை அமைப்பு காரணமாக ஏனைய இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மீன்பிடித்துறை சார்ந்து கூடுதலான முக்கியத்துவத்தைக் கொண் டிருத்தல் வேண்டும். ஆனால் கடந்த பல வருடங்களாக மொத்தத் தேசிய உற்பத்தி யில் இத்துறையின் பங்களிப்பானது 1 தொடக்கம் 2சதவீதற்திற்கும் இடைப்பட்ட தாகவே இருந்து வருகின்றது. இக்குறை வான பங்களிப்பானது இத்துறை தொடர்ந் தும் பின்தங்கிய நிலையில் இருப்பதையே காட்டுகின்றது. நிறைவான மீன் உணவுத் தேவை இறக்குமதி மூலமே பூர்த்தி செய் யப்பட்டு வருவது மூலவளமானது முழுமை யான பயன்பாட்டுக்குட்படுத்தப்படவில்லை என்பதையே புலப்படுத்துகின்றது. உற்பத் திப் போக்கில் கணிசமான அதிகரிப்பு ஏற் பட்டு வருகின்ற போதிலும் எதிர்பார்க்கப் பட்ட இலக்கினை இத்துறையினால் இன் றும் எய்த முடியவில்லை. 1983 வரையி லும் நாட்டில் நிலவிய இயல்பான சூழ் நிலையின் காரணமாக உற்பத்தியில் ஒரளவு வளவாய்ப்புக்கள் அதிகரிப்பு ஏற்பட்டதோடு மீன் இறக் குமதிகளின் அளவும் ஓரளவு குறைவடைந்து சென்றது. அத்துடன் கடலக ஏற்றுமதிகளின் அளவும் கணிசமான அளவிற்கு அதிகரித்துச் சென்று அந்நியச் செலாவணியையும் சம்பாதித்தது.