Abstract:
புவிமேற்பரப்பில் நீர் ஒரு முக்கிய பரி மா ண மா க இருப்பதனால் (Parameter) நீர்ச்சமனிலையாய்வுகளும் முக்கியமானவை யாக இருக்கின்றன. இம் முக்கியத்துவத்தின் அடிப்படையில் காலநிலையியலில் நீர்ச்சம னிலைக் காலநிலை (Water Balance Clim- atology) என்றவொரு புதியபிரிவும் தோற்று விக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு மட்டு மன்றி கைத்தொழில் மற்றும் மனித தேவை களுக்கு நீர் அத்தியாவசியமானதாக இருக் கின்றது. இந்நீர்வளத்திற்கான மூலம்படிவு வீழ்ச்சியாகும். படிவுவீழ்ச்சியினால் பெறப் படுகின்ற முழுநீர்வளத்தினையும் நாம் பயன் பாட்டிற்குட்படுத்திவிட முடியாது. பல்வேறு வழிகளினால் இழக்கப்படுகின்ற நீரிளை வைக்கழித்து எஞ்சியளவு நீரே எமது பயன் பாட்டிற்குக் கிடைக்கின்றது. இவற்றைக் கணிதரீதியாகக் கணிப்பிட்டறிகின்றவொரு முறையாக நீர்ச்சமனிலைக் கணிப்பீடு உள்ளது.