Abstract:
உலகளாவிய மனிதப் பண்பினை உயிர்ப் பாகக் கொண்டு விளங்கும் பெருஞ் சமயங் களுள் ஒன்றாகச் சைவம் விளங்குகின்றது. 'மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்' எனும் கூற்றுக்கமைய், சைவநெறியானது பல நாடுகளிலும், பல் வேறு மக்களாலும் ஏற்றிப் போ ற் றி வளர்ந்து வருவதனைக் காணக்கூடியதாக வுள்ளது. சிவனை . முழுமுதற் கடவுளாகக் கொண்டுள்ள இச் சைவ சமயம் இலங்கை, இந்தியா, நேபாளம், சிங்கப்பூர், அமெ ரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுக ளிலும் கடை டபிடிக்கப்படுதலைக் காணலாம். இவ்வாறு ஒவ்வொரு சமயமும் பெருகி வளர்ந்து வரும் நிலைக்கு ஒருசில காரணங் களினை நாம் இனங்காணக்கூடியதாக உள் ளது. சைவத்தின் வளாச்சி நிலைக்கு அது தன்னகத்தே கொண்டுள்ள சுயாதீனசித்தக் கருத்தும் முக்கியமான தொன்றாகும்.
இந்திய தத்துவத்தில் ஒவ்வொரு தத்து வங்களும் மதங்களாக, சமயங்களாக மிளிர்ந்து வந்துள்ளமை நோக்குதற்குரிய தொன்றாகும். வெறு இத் தத்துவங்கள் மனே சிந்தனைக் கோலங்கள் என்றவகை யில் தனித்து நிற்காது சமயங்களின் ஆதார மூலங்களாகத் திகழ்ந்துள்ளமை அவற்றின் சிறப்பு அம்சங்களாகச் சுட்டத்தக்கனவா கும். சாங்கியம், யோகம், நியாயம், வைசே டிகம், வேதாந்தம், மீமாஞ்சை, உலகாய தம், சமணம், பௌத்தம் போன்றன தத்து வங்களாக எடுத்தாளப்பட்ட அதேவேளை மதங்களாகவும் எடுத்தாளப்பட்டன.