Abstract:
ஈழத்திலே இந்து சமயத்தின் ஆரம்ப ஈழத்திலே வளர்ச்சி பெற்ற இந்து சமய காலம், அதன் வரலாறு வளர்ச்சி நிலை என்பன போன்ற விடயங்களை ஆராய விரும்புவோருக்கு இந்து சமயத்தினுடைய புராதன வரலாறானது தெளிவற்றதொன் றாகவே காணப்படுகின்றது. கி. மு. மூன் றாம் நூற்றாண்டு காலப்பகுதி வரையிலே காணப்படுகின்ற சமய நம்பிக்கைகள் யாவும் விளக்கங்கட்கு அப்பாற்பட்ட வகையிலே சிதறிக் கிடக்கின்றன. கிறிஸ்துவிற்கு முற் பட்ட கால இந்து சமயத்தின் புராதன நம் பிக்கைகள் அக்காலத்து வரலாற்றிலே எவ் வாறு இடம் பெற்றிருந்தன என்பதனையே இங்கு எடுத்துக் காட்டுவது எமது நோக்க மாகும்.
இந்தியாவின் சமய வரலாறானது எவ்வாறு வேதகால மக்களுடன் இணைந்த தொரு வரலாறாக அமைந்திருக்கின்றதோ; அவ்வாறே ஈழநாட்டு இந்து சமய வரலா றானது ஈழத்திலே புராதன காலம் வாழ்ந்த ஆதிக்குடி மக்களின் வரலாற்றுடன் கலந்து பட்டதொன்றாக விளங்குகின்றது. வைதீக சமயநெறிக்கு வேத இலக்கியங்கள் ஆதார மாக அமைந்திருப்பது போன்று ஈழத்திலே பௌத்த சமய வரலாற்றிற்கு 'மகாவம் சம்' என்ற பௌத்த சமய நூல் ஆதார மாக அமைந்திருக்கின்றது. ஈழநாட்டினு டைய புராதன இந்து சமய வரலாற்றினை அறிந்து கொள்வதற்கும் 'மகாவம்சம்' என்ற இந்த இலக்கியமே பெரிதும் உறுது ணையாக அமைகின்றதெனலாம். ஆயினும்சமயத்துடன் பெரிதும் ஒத்துள்ளன என்ப துடன் அதனின்றும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதவாறு ஒன்றிணைந்துள்ள தாகவும் விளங்குகின்றது. எனினும் அச் சமயமானது கால, தேச, பிராந்திய வேறு பாடுகட்கு ஏற்ப காலப்போக்கிலே தமக் கெனச் சில தனித்துவமான இயல்புகளைக் கொண்டதாகவும் ஈழத்திலே வளர்ச்சி யடைந்தது.