Abstract:
தென்னாசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் தேசக்கட்டுமாணம், தேசிய ஒருங் கிணைப்பு என்பன அரசியல் ஆய்வாளர்க ளிடையே முக்கிய கவனத்தைப் பெற்றுள் ளன. இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றவைகளாகக் காணப்படுவதுடன், அர சியல், பொருளாதார, சமூக ரீதியாகப் பல பிரச்சினைகளை எதிர்நோக்கும் நாடுகளா கவும் விளங்குகின்றன. இப்பிராந்திய நாடு களின் - தேசங்களின் தற்போதைய வடிவம் அல்லது புவியியல் எல்லைகள் மிக அண் மைக் காலத்தில் வரையறை செய்யப்பட்ட னவாகவும், அண்டை நாடுகளுடன் எல் லைத் தகராறுகளைக் கொண்டவையாக வும் உள்ளன. இத்தேசங்களில் பல பிரித் தானியர் தென்னாசியப் பிரதேசத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து உருவாக்கப் பட்டவையாகக் காணப்படுகின்றன. பிரித் தானிய இந்தியாவிலிருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் பாகிஸ்தானிலிருந்து பங்க ளாதேசமும் உருவாகின. இலங்கை, நேபா ளம், பூட்டான் ஆகிய புதிய தேசங்களும் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினை களை எதிர்நோக்கியுள்ளன. மொத்தத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இத்தேசங்கள்- அரசுகள் மிக இளமையானவையாகக் காணப்படுகின்றன. மேற்கைரோப்பிய நாடு களைப் போன்றோ, அல்லது ஐக்கிய அமெ ரிக்க நாடுகளைப் போன்றோ நீண்ட ஆயுள் கொண்ட தேசங்களாக இவை காணப்பட வில்லை.
தென்னாசியப் பிராந்தியத்திலுள்ள நாடுகள் அனைத்தும் பல மொழி, இன, மத, கலாசாரப் பாரம்பரியங்களைக் கொண்ட மக்கட் கூட்டங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவையாகக் காணப்படுகின் றன. இந்தப் பல்லினத் தன்மை இப்புதிய அரசுகளின் வளர்ச்சிக்குப் பல இடைஞ்சல் களை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியர் ஆட்சியை அகற்றுவதற்கு இம்மக்கட் தொகு திகளில் இருந்து வளர்ச்சிபெற்ற மத்தியவகுப் பினர் தலைமையில், பொதுவான ஒற்றுமை இம் மக்கட் கூட்டங்களிடையே ஏற்படுத் தப்பட்டது. இவர்கள் சுதந்திரப் போராட் டத்தை முன்னெடுத்துச்சென்று வெற்றியும் பெற்றனர். பொது எதிரியை அகற்றுவதில் இம்மக்கட் கூட்டங்கள் ஒன்றிணைந்திருந் தாலும், பொது எதிரியான பிரித்தானியர் ஆட்சியை அகற்றிய பின்னர் பல முரண் பாடுகளைத் தங்களிடையே எதிர்நோக்க வேண்டியவர்களாயினர். இதற்கு இப்பகு திகளில் வாழ்ந்த இனக்குழுக்களின் பழைய வரலாறும், பண்பாட்டம்சங்களும், பெரு மளவுக்குத் துணைபுரிந்தன. பொதுப்பட இப்பிராந்தியத்தில் வாழ்ந்துவரும் பல்வேறு இன மக்கட் சமுதாயங்களும் வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில் தனியான அரசு களையும், எல்லைப் பரப்புக்களையும், இன வரலாற்றில் 'பொற்காலங்களையும் கொண்டிருந்தன.