DSpace Repository

அழகியலும் மதமும்

Show simple item record

dc.contributor.author Krishnaveni, A.N.
dc.date.accessioned 2022-12-08T03:24:53Z
dc.date.available 2022-12-08T03:24:53Z
dc.date.issued 1993
dc.identifier.uri http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8743
dc.description.abstract அழகியல் என்பது தத்துவத்தின் ஒரு பிரிவாக ஆராயப்பட்டு வந்தாலும் நுண் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கோட்பாடே. கலை என்பது ஆற்றல், திறன் வழியாக, மனித ஆற்றல், மனிதத் திறன் (Human Skill) வழியாகக் படைக் கப்படுவது. இயற்கைக்கு நேர் எதிரிடை யானது. கலையைக் குறிக்கும் ‘Ars' என் னும் லத்தீன் சொல்லும் சிறப்புவகைத் தேர்ச்சியைக் குறித்து நிற்கிறது. ஆங்கிலத் தில் 'Art' எனும் பதம் கலை எனப் பொருள்படுகிறது. படைப்பாற்றல் மூலம் வெளிப்படுத்தப்படுவதும், சுவைபயக்க வல் லதுமான ஒரு ஆக்கமே கலை. கலை வெறுமையிலிருந்தோ வெறும் கற்பனையில் இருந்தோ தோன்றுவதல்ல. அதற்கு நிஜத் தன்மையுண்டு. சாதாரண வாழ்வில் நிக ழும் சம்பவங்களும், நிகழ்ச்சிகளும் கலைஞ னது கற்பனைக்குட்பட்டு இரசனைக்குரிய வெளிப்பாடாகப் புறவடிவம் பெறும்போது கலை எனப்படுகிறது. காலத்திற்குக் காலம் கலை என்றால் என்ன என்பதற்கு, அவர வர் அறிவுக்கும், அனுபவத்திற்கும் விளக்கம் தரப்பட்டது. ஷெல்லிங் (Schelling) என்பார், கலை உலகியலைக் கடந்து நிற்கும் ஒரு காட்சியினை நமக்குக் காட்டுகிறது என்று கூறுகிறார். கலை என்பது உணர்வின் வெளிப்பாடு. அது உணர்வை வெளிப்படுத்துவதுடன் பிறருக் கும் அவ்வுணர்வை ஊட்டும் பெருமை உடையது என்று டால்ஸ்டாய் (Tolstoy) கூறுகிறார். கலை என்றால் என்ன? என்ற வினாவுக்கு நேரடியாக விடை கூறமுடியாது. கலைப்படைப்புப் பற்றிய ஆராய்ச்சியில் இது தவறான விடை கூறமுடியாத ஒரு நிலையை உணர்த்துகிறது எனக் கூறும் நெல்சன் குட்மான் (Nelson Goodman) ஒரு சந்தர்ப்பத்தில் கலையாக உணரப்படு வது பிறிதொரு சந்தர்ப்பத்தில் கலையாக உணரப்படுவதில்லை. எனவே கலைக்குப் பொதுவான இலக்கணம் கூறும் முயற்சி பயனற்றது என்கிறார். இவரது கருத்துப் படி 'கலை என்றால் என்ன? என்ற வினா வைத் தவிர்த்து ஒரு படைப்பு எப்போது கலையாகிறது' என்ற வினாவுக்கு விடை தேடுவதே சாலப்பொருத்தமானது. ஒரு படைப்பின் கலைத்துவம், புறஉருவம் நிறம், முன்னுதாரணப்படுத்தும் பண்புகளே அதனைக் கலையாக எடுத்துக்காட்டும். கட்டடம், சிற்பம், ஓவியம், இசை, நட னம், நாடகம், இலக்கியம் போன்ற வடி வங்கள் கலைப் படைப்புக்களாகக் கொள் ளப்படுபவை. இப்படைப்புக்கள் ஒவ்வொன் றையும் கண்டும், கேட்டும், தொட்டும், அனுபவித்தும் அதன் பரப்பையும், ஆழத் தையும். அனுபவத்தையும் ஒருவாறு அறிந்துகொள்ளலாம். en_US
dc.language.iso other en_US
dc.publisher University of Jaffna en_US
dc.title அழகியலும் மதமும் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record