dc.description.abstract |
கலை, சமூக விஞ்ஞானம் சார்ந்த காலாண்டுச் சஞ்சிகையாகச் 'சிந்தனை' பேரா தனைப் பல்கலைக்கழகத்தில் 1967 சித்திரையில் உதயமாகி ஆடி 1972 வரை வெளிவந் தது இச் சஞ்சிகையின் வெளியீட்டுடன் தொடர்பு கொண்டிருந்த சிலர் இலங்கைப் பல் கலைக்கழகத்தின் ஓர் உறுப்பாக யாழ்ப்பாண வளாகம் அமைக்கப்பட்ட காலத்தில் இந் நிறுவனத்திலே இணைந்து கொண்டனர். புதிய வளாகத்தில் தமிழில் ஆராய்ச்சி சஞ்சிகை ஒன்றை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது சில ஆண்டுகளாக இலங்கையில் கலை, சமூக விஞ்ஞானத் துறைகளைப் பொறுத்த மட்டில் ஆராய்ச்சி ஏடாக வெளிவந்த சிந்தனையைத் தொடர்ந்து வெளியிட வேண்டுமென்று யாழ்ப்பாண வளாக மனிதப் பண் பியற் பீடத்தினர் தீர்மானித்தனர். அதன் விளைவா? மனிதப் பண்பியற் பீடத்தின் வெளியீடாக 1976 தையில் 'சிந்தனை' மறு பிறவி எடுத்து நான்கு இதழ்களை வெளி யிட்டு வாடிப் போயிற்று.
1983 பங்குனியில் மிண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட வெளியீடாக சிந்தனை தளிர்விட்டு வளரத் தொடங்கியது. இடையிடை நிதி நெருக்கடி காரணமாக வும் அரசியல் குழப்பநிலை காரணமாகவும் காலம் தாழ்த்தி மலர்ந்திட்டாலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ளது. 1993 பங்குனியில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட நிதியிலிருந்து பணம் ஒதுக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றது. இவ்வகை யில் இலங்கைப் பல்கலைக்கழக மனிதப் பண்பியற்பீட வெளியீடாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட வெளியீடாகவும் மலர்ந்த 'சிந்தனை' ஆய்வுக் கட்டுரைகளின் விபரப்பட்டியல் ஆய்வாளர், மாணவர் நலன்கருதி இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. இதுவரை 126 ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி சிந்தனை வெளிவந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். |
en_US |