dc.description.abstract |
பதினேழாம் நூற்றாண்டில் இலங்கை யைப் பற்றிய பல நூல்கள் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கில மொழிகளில் எழுதப் பட்டன. அவை இலங்கையின் வரலாற்றை எழுதுவதற்குப் பெரிதும் பயன்படுவனவாக உள்ளன. அவற்றுள் முதன்மை இடத்தினை வகிப்பதாக பெர்னாங் த. கேய்ரோஸ் (Fernao de Oneyroz) என்றபோர்த்துக்கேய ஆசிரியரால் எழுதப்பட்ட இலங்கையை இலௌகீக, ஆனமிக வழிகளில் கைப்பற்று தல் 'The Temporal and Spiritual conq- uest of Ceylon' 1 என்ற நூல் அமைகின் றது. இந்த நூல் பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் இலங்கையின் கரை யோர அரசுகளின் வரலாற்றை அறிவதற்கு உதவுகின்றது. குறிப்பாக இக் குறிப்பிட்ட காலப்பகுதியின் யாழ்ப்பாணப் பட்டின இராச்சியத்தின் வரலாற்றை அறிந்து கொள்வதற்குப் பெரிதும பயன்படுகின்றது. |
en_US |