Abstract:
சமகால உலகம் தலைமைத்துவம்என் கிற எண்ணக்கரு குறித்து நோக்க வேண்டிய கட்டாயக்கடப்பாட்டைக் கொண்டுள்ளதெனலாம். தேசத்தின் பொருளாதார வளத்தை மேம்படுத்த கலாசார, பண்பாட்டு விழுமியங்க ளைச் சிறப்புறச் செய்ய, உடல்- உள வலுக்களை வளர்த்தெடுப்பதில் முக் கிய கூறுகளிலொன்றாய் விளங்கு கின்றவிளையாட்டுத்துறையை விருத்தி செய்ய, மனப்பண்புகளை வளப்படுத்தி மானிடத்தை உயர்வ டையச் செய்ய, தலைமைத்துவம் தலைமைத்துவப்பண்புகள் தனிநபர் ஒவ்வொருவரிடமும் வளர்க்கப்பட வேண்டும் என்கிற கருத்து வலிமையு டன் காணப்பெறுகின்றது. முதலா ளித்துவ நாடுகள் நாடுகள் தலைமைத்துவப் பண்புகளைத் தனிநபர்களிடையே வளர்தெடுக்கப் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொள்கின்றன. பொதுவு டமைக் கொள்கைகளைத் தமது விழு மியங்களாகக் கொண்ட நாடுகள் தனி நபர் தலைமைத்துவ வளர்ச்சிக்கான அதீதமுயற்சிகள் குறித்துத் தமது அதி ருப்திகளை வெளிப்படுத்துகின்றன.