Abstract:
மூன்றாம் உலக நாடுகளின் கல்வித் திட்டமிடலில், கல்விக்கும், வேலைவாய்ப் புக்களுக்குமிடையேயுள்ள தொடர்புகளை இணக்கப்படுத்தலும், மீள வலியுறுத்தலும் தவிர்க்கமுடியாத அழுத்தங்களாக மேற் கிளம்பியுள்ளன, "கல்வி உலகு'', “வேலை உலகு” என்ற இரண்டு தொழிற்பாடுகளுக் குமிடையே ஏற்பட்ட இணக்கமின்மை தொடர்பான ஆய்வுகளின் வளர்ச்சியிலே தோன்றிய ஒரு புதிய பரிமாணமாக "கல் வியும்-சுயவேலை வாய்ப்புக்களும்'' முகிழ்த் துள்ளது.
இலங்கையின் கல்விக்கும் வேலைவாய்ப் புக்குமிடையேயுள்ள இணக்கப்பிறழ்வை விளக்க வந்த இளைஞர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பின்வரும் கருத் துக்களை முன்வைக்கின்றது.1
(அ) 1987ஆம் ஆண்டில் மட்டும் க.பொ.த.சாதாரண பரீட்சை யில் சித்தியடையாத 389, 381 மாணவர்கள் ஏதாவது தொழில் களைத் தேடிக்கொள்ளுமாறு
கைவிடப்பட்டார்கள்.