Abstract:
விஞ்ஞானமானது மனிதனைச் சூழவுள் ளனவற்றைப் பற்றிய சரியான விளக்கத் தைக் காலாகாலம் அளித்து வருகின்றது. இது மனிதனுக்குப் பெருமளவில் சௌகரி யங்களை அளித்துவரும் அதேவேளையில் அவனது குறைபாடுகளையும் அவனுக்கு உணர்த்தி வருகின்றது, மருத்துவம், விவ சாயம், விலங்குவேளாண்மை, பொறியியல் மற்றும் தொழிற்துறைகள் யாவற்றிலும் விஞ்ஞான அறிவு பின்னிப்பிணைந்துள்ளது. புத்தாக்கங்களினூடாக மனித வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இது வழி கோலுகின் றது. மேலும், சில உண்மைகளையும் தத் துவங்களையும் அவன் அறிந்துகொண்டு, சூழல் பற்றிய விளக்கத்தைப் பெற்றுத் தொழிலாற்றுவதற்கு வேண்டிய மனப்பான் மையை விருத்திசெய்து, உலகுடன் பொருத் தப்பாடடையவும் செய்கின்றது. எனவே தான் விஞ்ஞானக் கல்வியூடாக மாணவ னது வாழ்க்கைக்கேற்ற அறிவு, ஆற்றல், திறன், மனப்பாங்கு என்பன வளர்த்தெடுக் கப்பட வேண்டும். இவை அவனது நாளாந்த வாழ்க்கைக்குப் பயனளித்து, தொழிலுலகுக்கும் அவனை வழிகாட்ட வேண்டும். இந்நோக்கங்களை முக்கியமாகக் கருத்திற்கொண்டே எமது (இலங்கை) இடைநிலைப் பாடசாலைக் கலைத்திட்டத் தில் விஞ்ஞானபாடம் அறிமுகம் செய்யப் பட்டுக் கற்பிக்கப்பட்டு வருகின்றது.