Abstract:
மொழி இலக்கிய ஆய்வாளர்களால் நடை என்ற பதம் அடிக்கடி கையாளப் பட்டு வருவதைப் பலரும் அறிவர். எனி னும் நடை என்பது இதுதான் என்று பல ரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கருத்தை இதுவரை எவரும் கூறியதாகத் தெரிய வில்லை. அருமையான நடை, ஆற்றொ ழுக்கான நடை, கடினமான நடை, தாவித் தாவிச் செல்லும் நடை என்றவாறெல் லாம் பலரும் கூறுவதைக் கேட்கின்றோம். ஆனால் இத்தகைய சொற்றொடர்கள் குறிக்கும் பொருளை வரையறுத்துக் கூறு வது கடினமானதே. ஓர் இலக்கியப் படைப்பை வாசித்தவர் அதன் நடை அழ கானது என்றோ கடினமானது என்றோ கூறுவது சுலபம். ஆனால் அது எவ்வாறு நல்ல நடையாகவோ கடினமான நடை யாகவோ அமைந்தது என்பதை விளக்குவது கடினமானதே.
நடை என்றால் என்ன? என்பது பற் றிய தெளிவான வரையறை கூறப்படவில் லையே என்பதற்காக நடை என்பதே இல் லாத ஒரு பொருளாகிவிடாது, ஆசிரியர் கொடுத்த துணைக் குறிப்புக்களையே ஆதா ரமாகக் கொண்டு ஒரே வினாவுக்குப் மாணவர்கள் விடை எழுதினாலும் எந்த இருவரது விடைகளும் ஒரே மாதிரி அமை வதில்லை