Abstract:
இந்த நூலுக்கு இணையாகச் சுட்டக் கூடிய மெய்யுணர்வுத் தொகுப்பொன்றை உலக இலக்கிய பரப்பிலே காண்பதரிது'' என்பது ஜெர்மனிய அறிஞர் அல்பர்ட் சுவைட்சர் அவர்களது கணிப்பு. இந்நூல் தரன் எழுந்த காலப்பகுதியிலே மரபாகப் பேணப்பட்டு வந்த வாழ்வியற் கூறுகளில் விழுமியவற்றைப் பேணிக் கொண்டது; பொருந்தாதவை எனத்துணிந்தவற்றைக் கண்டித்தது; மரபுசார் நடைமுறைகள்,
சிந்தனைகள் என்பவற்றிற் சிலவற்றை விமர்சிப்பதன் ஊடாக அக்காலப் பகுதியிற் புரட்சிகரமானவை எனத்தக்க எண்ணங் களை முன்வைத்தது. இவற்றின் மூலம் தமிழர் பண்பாட்டில் மட்டுமன்றி அனைத் திந்திய பண்பாட்டிலும் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய நூலாகவும் அது திகழ்கின் றது. இவ்வாறு திருக்குறள் திருப்புமுனை ஏற்படுத்திய கூறுகளுள் ஒன்று ஊழ்' தொடர்பான சிந்தனை ஆகும். இதனைத் தெளிவுறுத்தும் முயற்சியாக இந்த ஆய்வுக் கட்டுரை அமைகிறது.