Abstract:
சைவசித்தாந்த மெய்யியற் சிந்தனை யில்-குறிப்பாக ஒழுக்கவியல் தொடர்பான சிந்தனையில், தேவிகாலோத்திரம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஞானத்தைப் பெறுவதால் மட்டுமே ஆன்மா முத்தியடை யும் எனக் கூறும் ஆகம நூல்களில் ளாகமத்தின் பேதமான இவ்வாகமமும் ஒன்று. உயிரின் விடுதலைக்கான அறிவு பற்றியும், அவ்வறிவைப் பெறுவதற்கான ஒழுக்க நடைமுறைகள் பற்றியும் இதிற் கூறப்படுகிறது.
தேவி, காலம், உத்தரம் என்ற மூன்று சொற்கள் கொண்ட தொடர் மொழியால் இவ்வாகமத்தின் பெயர் ஆக்கப்பட்டுள்ளது. காலம், உத்தரம் என்ற இரு சொற்களும் புணர்த்தப்பட்டு காலோத்தரம் என்றும், உமாதேவியாருக்குப் போதிக்கப்பட்டமை யால் தேவி என்ற பெயரையும் பெற்று தேவிகாலோத்திரம்" என அழைக்கப்பட லாயிற்று. இந்நூல் ஞானம், ஞானசாரம் என்ற இருபிரிவுகளைக் கொண்டது. ஞானம் என்பது உண்மையறிவு எனவும், ஞானசாரமென்பது அவ்வறிவை அடைவ தற்குரிய ஆசாரம்- எனவும் பொருள் தரும்.