Abstract:
உள்ளுராட்சி அரசாங்கம்' என்ற பதம் பொதுவாக உள்ளூர் விடயங்களை ஒழுங்கு படுத்தி நிர்வகிக்கின்ற சுயாதீனமான, ஆனால் இறைமையற்ற, ஜனநாயக ரீதி குழுமங்களைக் குறிக்கிறது. ஒரு நாட்டின் அதிகாரப் படிமுறையில் உள்ளூ ராட்சி அரசாங்கம் மூன்றாவதாக இடம் பெறுகிறது. உயர் மட்டத்தில் தேசிய அல்லது மத்திய அரசும், இடைமட்டத்தில் மாகாண அல்லது மாநில அரசும், மட்டத்தில் உள்ளூராட்சி அரசாங்கமும் அமைகின்றன. பிரதேச ரீதியிலான அதி காரப் பரவலாக்கத்துக்கும், உயிர்ப்புள்ள ஜனநாயகத்துக்கும், சுய சார்பான அபி விருத்திக்கும் ஏற்றதோர் ஊடகமாகவும், உபாயமாகவும் உள்ளூராட்சி அரசாங்க முறை இருந்து வந்துள்ளது. ஒற்றை யாட்சி-கூட்டாட்சி என்றோ, சித்தாந்த- கலாசார முரண்பாடுகள் என்றோ, அபி விருத்தியடைந்த நாடுகள் - அபிவிருத்திய டையும் நாடுகள் என்றோ இல்லாமல், எல்லா அரசுகளிலும் காணப்படும் ஒரு பொதுவான அம்சமாக உள்ளூராட்சி அர சாங்கமுறை முக்கியம் பெறுகிறது.
நவீன உள்ளூராட்சி அரசாங்கமானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்
1
பிய - அமெரிக்கத் தாராண்மை வாதத்தின் பக்கவிளைவுகளில் ஒன்றாக உருவாகிப் பின்னர் அந்நியர் ஆட்சிக்காலத்தில் குடி யேற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப் பட்ட ஒன்றாகும். இருப்பினும் உள்ளூ ராட்சி அரசாங்கத்துக்கு நீண்ட வரலாற் றுப் பாரம்பரியம் உண்டு. நாகரிகம் அடைந்த மக்கள் உள்ளூர்ப் புறங்களில் கூடிவாழ முற்பட்ட போதே அவர்கள் நலன் பேணும் உள்ளூர் அமைப்புக்களும் தோன்றி விட்டன. முடியாட்சி நிலவிய புராதன காலத்தில் கூட, ஏறத்தாழ எல்லா நாடு களிலும், கிராமிய மட்ட அமைப்புக்கள் மக்கள் பங்குபற்றலையும், ஜனநாயகப் பெறுமானங்களையும் கணிசமான அளவில் பேணிவந்துள்ளன. 1 உதாரணமாக, இலங்கையின் 'கம்சபாக்கள்'. இந்தியாவின் பஞ்சாயத்துக்கள்', சீனாவின் 'கிஷியாங்' என்ற குழுமங்கள், கிழக்கிந்தியத் தீவுகளின் மூத்தோர் கழகங்கள்' ஆபிரிக்காவின் குலமரபுக் குழுக்கள்' முதலானவற்றைக் கூறலாம். குடியேற்ற நாடுகளின் சுதந்திரப் போராட்ட காலத்திலும், சுதந்திரத்தின் பின்பும் பண்டைய கிராமிய அமைப்புக் களுக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதனால், பல மூன்றாம் உலக நாடுகளில், நவீன உள்ளூராட்சி அரசாங்க முறையில் மரபு ரீதியான பண்புகளும் குறிப்பிட்டளவு ஊடுருவியுள்ளன.