Abstract:
பாரம்பரியம், முடநம்பிக்கை மற்றும் வறுமை ஒரு புறமும் விருத்தி பெற்று வரும் மருத்துவ தொழில்நுட்பம் மறுபுறமுமாக செயற்பட்டு வருவதன் விளைவாக உலகில் குறிப்பாக விருத்தி பெறாத, வளர்முக நாடுகளில் பெண் பிறப்புக்களைப் பெரிதும் விரும்பாத நிலை அதிகரித்து. வருகின்றது. இதனால் பாலினத்தேர்வு, கருக்கலைப்பு, சிசுக்கொலை, பாலியல்வல்லுறவு. தகாப்புணர்ச்சி, விபச்சாரம். பெண்களது அந்தஸ்தினை அங்கீகரிக்காமை போன்ற பல்வேறு வகைப்பட்ட பெண்களுக்கெதிரான வன்முறைகளினால் பால்விகிதத்தில் பெண்களை விஞ்சிய ஆண்கள் அதிகரித்து வரும் நிலை தொடர்கின்றது. இது எதிர்காலத்தில் பல்வேறுபட்ட பாதகமான சமூக பண்பாட்டு விளைவுகளை தோற்றுவிக்க வாய்ப்புண்டு. எனவே இது பற்றிய இவ்வாய்வு இந்தியாவை சிறப்புதாரணமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.