Abstract:
இலங்கை போன்ற வளர்முகநாடுகளின் பல்கலைக்கழகங்களின் கல்வி, தொழில் வாய்ப்புப் பெறும் தகுதியை வழங்கத்தவறிவிட்டதென்ற கருதுகோளை இவ்ஆய்வுக்கட்டுரை அடிப்படையாகக் கொள்கிறது. தொழில் உலகின் தேவைகளினடிப்படையில் பல்கலைக் கழகங்களின் கல்விப்போக்கினை மதிப்பிட்டு அவை தொடர்பாகக் காணப்படும் குறைபாடுகள் அவற்றினைக் குறைக்கும் வழிமுறைகள் என்பன விவரண ஆய்வுமுறையில் இங்கு ஆராயப்படுகின்றது. பல்கலைக்கழகக் கல்வி தொடர்பான புதிய மாற்றங்களை இவ்வாய்வுக் கட்டுரை சிபார்சு செய்கின்றது.