Abstract:
யாழ்ப்பாணத் தமிழில் பால்காட்டும் பெயராக்க உருபுகள்' என்னும் இவ்ஆய்வுக் கட்டுரையின் முக்கிய நோக்கமானது யாழ்ப்பாணத் தமிழில் வழங்கும் பால்காட்டும் பெயராக்க உருபுகளையும், அவை அடிச்சொல்லுடன் சேர்வதன் மூலம் தோன்றும் ஆக்கப் பெயர்களையும் ஒலிமாற்றம் மூலம் அமையும் ஆக்கப் பெயர்களையும் விவரித்துக் கூறுவதேயாகும். இவ்வாய்வானது ஓர் அமைப்பு முறையடிப்படையிலமைந்த விவரண ஆய்வாகும்.