Abstract:
ஐயவாதம் எனும் எண்ணக்கரு
நிச்சயமான அறிவினைப் பெறுதல் சாத்தியமாகுமா? உண்மைய மயறிவினைப் பெறுதல் முடியுமா? என்பவை போன்ற வினாக்களுக்கு விடை காண முற்பட்ட போது அறிவாராய்ச்சியியலில் தோன்றியதொரு பிரச்சனையே ஐயவாதமாகும். உண்மையறி வின் சாத்தியம் குறித்த சந்தேகங்கள் சமூக விஞ்ஞானங்களுக்கு மட்டுமுரியதொன்றல்ல, விஞ்ஞான வழி அறிகைப்பேறுகளுக்கும் உடன்பாடானதொன்றே. விஞ்ஞான வளர்ச்சி ளின் விளைவாக பல புதிய உண்மைகள் ஏற்கப்படுதலையும் பழைய கருத்துக்கள் கைவிடப்படுதலையும் காண முடிகிறது. உண்மையறிவு என்கிறதொன்று, தோன்றும் காலத்திற்கு இயைபாக சில ஆதாரங்களைக் கொண்டிருக்கும். அவ்வாதாரங்களோடு அவற்றினை நாம் நிச்சயமான அறிவு என அப்போதைக்கு ஏற்றுக்கொள்கிறோம். காலவளர்ச்சிகள் கருத்து வளர்ச்சிகள் 'உண்மையெனக் குறிக்கப்பட்டவை' குறித்து மேலதிகமாக சாதக, பாதக கருத்துக்களை தரும்.