Abstract:
தமிழிலே பழந்தமிழிலக்கண நூல்கள் பல கிடைக்கின்றன. அவற்றுட் பலவற்றின் மொழிநடை பிற்காலத்தவர்களுக்குக் கடினமாக அமைகின்றது. அந்த வகையிலே தொல்காப்பியம், நன்னூல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது காலத்துக்கு வேண்டிய புதிய விடயங்களைச் சேர்த்தும் தேவையற்ற விடயங்களை நீக்கியும் எளிமையான மொழிநடையில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் எழுதிய இலக்கணச்சுருக்கத்திலுள்ள புதுமையான விடயங்களை அறிமுகப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது.