Abstract:
குடித்தொகைக் கல்வியானது மக்களது வாழ்வியல் பண்புகளோடு பின்னிப்பிணைந்துள்ளது. இனம், மதம், மொழி, பண்பாடு போன்றன குடித்தொகைக் கூட்டுப்பகுதிக்குள்ளடக்கப்படுகின்றன. இந்த வகையில் மதம் பற்றிக் கல்வி குடித்தொகைக் கல்வியுடன் நெருங்கிய தொடர்புடையது. இவ்வாய்வானது உலகில் வாழும் மக்களில் ஒரு பகுதியினரால் உள்வாங்கப்பட்டு பின்பற்றிவரும் இந்துமதத்தின் தோற்றம், அம்மதத்தைப் பின்பற்றுபவர்களின் உலகளாவிய பரம்பல் போக்கு மற்றும் இம்மதம் எதிர்நோக்கும் சவால்கள் போன்றன பற்றி விளக்கிச் செல்கிறது.