Abstract:
தமிழ் நாவல்களில், சமூக நாவல்கள், குடும்ப நாவல்கள், துப்பறியும் நாவல்கள், வரலாற்று நாவல்கள் என்றவாறு பல நாவல் வகைகள் உள்ளமை யாமறிந்ததே. இவ்விதத்தில் சென்ற நூற்றாண்டின் எண்பதுகள் தொடக்கம் இலங்கைத் தமிழ் நாவல் வளர்ச்சிப் போக்கிலே முகிழ்த்த புகலிட நாவல்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது தவிர்க்க இயலாததாகின்றது ஏனெனில் சிறப்பாக இலங்கை நாவல் வளர்ச்சிப்போக்கிலும், பொதுவாக தமிழ் நாவல் வளர்ச்சிப்போக்கிலும் இவை முக்கியம் பெறக்கூடியனவாகவுள்ளது. இத்தகைய புகலிட நாவல்களின் பண்புகளை விரிவாக எடுத்துக் கூறுவதாகவும் இவ்வழி இவை தமிழ் நாவல் வளர்ச்சிப் போக்கிலே பெறுகின்ற முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்துவதாகவும், இவ்வாய்வு முயற்சி அமைகின்றது.