Abstract:
தென்னாசியா, பண்டைய நாகரிக வரிசையில் இடம்பெறும் பிராந்தி யம் மட்டுமன்று, பண்டைய வழிபாட்டின் எச்சங்களின் தொடர்ச்சியையும் உடைய பிரதேசமாகும். இங்கு பல்வேறு நிலையில், பல்வேறு காலங்களில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கைகள், பின்வந்த நம்பிக்கைகளுடன் கலந்து நிற் கின்ற நிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இத்தகைய நம்பிக்கை யில் குறிப்பிடத்தக்கவைதான் யக்ஷ, நாக வழிபாடுகளாகும். இவற்றைப் பற்றி பரணவித்தானா போன்றோர் (Paranavitane S. 1929) இற்றைக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பாக ஆராய்ந்திருந்தாலும் தற்போது நமக்குக் கிடைக்கும் சான்றுகளுக்கமைய இன்னொரு கோணத்தில் இவற்றை அணுகு வது பொருத்தம் என்றே கருத இடமிருக்கிறது. அன்று பரணவித்தானா இவை பற்றிக் கூறும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்,
- “பௌத்தம் இங்கு வரமுன்பு நிலவிய யக்ஷ வழிபாடு புத்தர்காலத் தில் வடநாட்டில் நிலவிய யக்ஷ வழிபாட்டை அப்படியே ஒத்துக் காணப் படுகிறது. பெளத்தம் இங்கு தேசியமதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டா லும்கூட, பௌத்தத்தோடு யஷ வழிபாடு அருகருகில் மக்கள் மத்தி யில் வழக்கிலிருந்து தற்காலம்வரை நீடித்துள்ளது. இவ்வித வழிபாடு கணிசமான அளவு நாட்டார் இலக்கிய வளர்ச்சிக்கும் உதவி உள்ளது. இவற்றுள் (இலக்கியங்களில்) பெரும்பாலானவை காலத்தால் பிற்பட்ட வையே. அத்துடன் இன்று வழக்கிலிருக்கும் யக்ஷ கடவுளரும் பிற்பட்ட காலத்தில் எழுச்சி பெற்றவையே அல்லது அவர்கள் பெயர்கள் எடுத்துக் காட்டுவனபோல் தென்னிந்தியாவிலிருந்து இங்கு பின் தங்கிய கலாச்சா ரத்தை உடையோரால் புகுத்தப்பட்டவையே. இருந்தும் இவற்றின் சான்றுகள் பற்றிக் கூறும் இலக்கியங்களையும், பௌத்த, ஜைன, மற்றும் இந்திய இலக்கியங்கள் யக்ஷ வழிபாடு பற்றித் தரும் தகவல்களோடு ஒப் பிட்டு ஆய்வது நிச்சயமாக நல்ல முடிபுகளைத் தரும்'' (Paranavitane S. 1929 : 317) எவ்வாறாயினும் அன்று தொட்டு இன்றுவரை இவைபற்றி விரி வாக ஆராயப்படாதது வருந்தத்தக்கது.