Abstract:
யாழ்ப்பாண மாவட்டம் இலங்கையின் வடபகுதியில் 964.5 சதுர மைல்1 பரப்பினைக் கொண்டிருக்கின்றது. புவியியல் ரீதியாக இம்மா வட்டத்தை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.2 வடமேற்கேயுள்ள தீவுத் தொகுதிகள் . குடாநாட்டுப்பகுதி, தாய்நிலப்பகுதி என்பனவே அவையாகும். இப்பிரிவுகள் பௌதிக ரீதியாக வேறுபட்ட பண்பினைக் கொண்டிருப்பதுடன் பண்பாட்டு ரீதியிலும் இது ஓரளவுக்கு பிரதிபலித் திருப்பதை உணரமுடிகின்றது. இப் பிரதேசங்களிடையே சமூக, பொரு ளாதார ரீதியில் பெரியளவான மாற்றங்களைக் கொண்டிருக்காதுவிடினும் பிரித்தாராய்வதில் எவ்வித கஷ்டமும் இருக்கமுடியாது. மேலும், இம்மா வட்டத்தில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் இலங்கைத்தமிழர்களே அதிக மாகவுள்ளனர். இவர்களுக்கு சமூக பொருளாதார, கலாசார, அரசியல் ரீதியில் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற மக்களிலும்பார்க்க வேறு பட்ட பண்புகள் இருப்பதைத் தெளிவாகக் காண முடிகின்றது. வரலாற்று ரீதியாக இம்மாவட்ட மக்களுக்கிருந்த முக்கியத்துவம் சுதந்திரத்தை அடுத்து குறைவடைந்துவரினும் தங்களது முயற்சி, திடமனப்பான்மை ஆகியனவற்றால் தங்களை மேல்நிலைக்குக் கொண்டுவர முயல்கின்றனர் என லாம். இவ்வாறான பண்புகளைக் கொண்டுள்ள இம்மாவட்ட மக்கள் இம் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டத்துக்கு வெளியிலும், சர்வதேச ரீதியாக வும் இடப்பெயர்வினை மேற்கொண்டு வருகின்றனர். இந் நிகழ்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதேபோல வெளி மாவட்டங்களில் வாழும் மக்கள் இம்மாவட்டத்திற்குள் இடப்பெயர்வினை சிறியளவில் மேற்கொள்கின் றனர். இடப்பெயர்வினை வரலாற்று ரீதியாக முன்னோக்கிப் பார்த்தல், தரவுகள் ரீதியாக அறிதல் , இடப்பெயர்வினால் ஏற்பட்டுவரும் சமூக, பொருளாதார கலாசார மாற்றங்களை அறிதல் ஆகியன இவ்வாய்வில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இவ் வாய்வுக்கு அவசியமான இடப் பெயர்வுபற்றிய கோட்பாடுகள், தேறிய இடப்பெயர்வினைக் கண்டுகொள் வதற்கான வழிமுறைகள் போன்றனவும் விளக்கப்படுகின்றன.