Abstract:
வரண்டபிரதேசத்தில் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றத் திட்டங் களின் சமூக பொருளாதார ஆய்வுகளில் புவியியலாளர்கள் மாத்திரமன் றிச் சமூகவியலாளர்கள், பொருளாதார, திட்டமிடல் நிபுணர்கள் முதலி யோரும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இதில் பி. எச். பாமர் என்பவ ருடைய ஆய்வு (1957) பின்வந்தோருக்கு ஒரு வழிகாட்டி ஆய்வாக அமைந்தது. இதன் பின்பாக இந்நாட்டைச் சேர்ந்தவர்களும், நிறுவனங் களும் பல்வேறு கோணங்களில் ஆய்வினையும், மதிப்பீடுகளினையும் மேற் கொண்டுவரலாயினர். வரண்டபிரதேச அபிவிருத்தியில் குடியேற்றத் திட் டங்கள் அத்திவாரமாக இருந்ததுடன் இந்நாட்டின் உள் நாட்டு விவசாய அபிவிருத்தியிலும், சுயதேவைப் பூர்த்தியிலும் புறக்கணிக்க முடியாத அளவு முக்கியத்துவமும் பெற்றிருந்தன. இதுவரை வெளிவந்த ஆய்வுக ளின் முடிவுகள் குடியேற்றத் திட்டங்களில் அவதானிக்கப்பட்ட குறைபாடுக ளையும், அவற்றின் அபிவிருத்தியில் மேற்கொள்ளப்பட்டுவந்த நடவடிக்கை கள் எந்தளவுக்கு வெற்றியளித்துள்ளன என்பதனையும் எடுத்துக்காட்டின. மேலும் வரண்டபிரதேச அபிவிருத்தி தொடர்பாக மேற்கொள்ளப்பட விருக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் அனுபவரீதியான பல விதந் துரைகளையும் வழங்கியிருந்தன. தொழில் நுட்பங்களின் பங்களிப்பும் உற்பத்தித் திறனும் தொடர்பாக இவ்விதமான ஒரு நோக்கினைக் கொண்டே இக்கட்டுரை அமைகிறது.