Abstract:
1978 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இரண்டாம் குடியரசு அர சியல் திட்டத்தில், இலங்கையின் பிரதிநிதித்துவமுறை விகிதாசார அடிப் படையைப் பெற்றுள்ளது. இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, குறிப் பாக, நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து நடைமுறையிலிருந்துவந்த வெஸ்ட் மினிஸ்டர் மரபிலான எளிய பெரும்பான்மைத் தேர்தல் முறையிலிருந்து (simple majority system) புதியமுறை முற்றிலும் வேறுபடுகிறது. கட்சிகள் பெறுகின்ற வாக்குகளுக்கும், அவை பெறுகின்ற ஆசனங்களுக்குமிடையே, விகிதாசார ரீதியான ஒரு தொடர்பையேற்படுத்துவதன் மூலம், பிரதிநிதித் துவத்தின் ஜனநாயகப் பண்பினை மேலும் வலுப்படுத்த உதவுவதே புதிய முறையாகும். இக்கட்டுரை, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின்கீழ், தமிழ்பேசும் சிறுபான்மையினங்களின் அரசியல் ஆதாயங்களையும் இழப் புகளையும் ஆராயமுற்படுகிறது. தமிழ்பேசும் சிறுபான்மையினங்கள் எனும் தொடர், இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், தமிழ்பேசும் முஸ்லீம்கள் என்போரை உள்ளடக்குகிறது.