Abstract:
கடலின் ஆழமற்ற கண்டமேடைகள் காணப்படும் இடங்கள் மீன் பிடித்தொழிலுக்கு வாய்ப்பான இடங்களாகும். இப்பகுதிகளில் மீனிற்கு வேண்டிய ''பிளங்ரன்'' என்னும் உணவுவகை அதிகளவில் பெருகி வளர வாய்ப்புக் காணப்படுகிறது. இலங்கையைச் சுற்றியுள்ள இக்கண்டமேடை பொதுவாக ஒடுங்கியதாகக் காணப்படினும், யாழ்ப்பாணத்தை அடக்கிய வடபகுதியில் இது சற்று அகலமாகக் காணப்படுகின்றது.
1983ஆம் ஆண்டு இங்கு 45,000 தொன் மீன் உற்பத்தி செய்யப் பட்டிருக்கின்றது. இலங்கையின் மொத்தப் பெறுமதியின் அடிப்படையில் பார்க்கும்போது இது 620 மில்லியன் ரூபா பெறுமதி உடையதாகும். இதே ஆண்டில் யாழ்ப்பாணப் பகுதியின் நெல் உற்பத்தி 96,560 தொன் ஆகும். எனவே மீன் உற்பத்தி ஏறத்தாழ இதன் 50 சதவீதத்தை வகிப்பதுடன் உணவிலும் புரதச்சத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது.
கடந்த காலத்தை நோக்கினாலும் இலங்கையின் மீன் உற்பத்தியில் யாழ்ப்பாணம் 18-24 சதவீதத்தை வகித்துவந்திருக்கின்றது. 1963 ஆம் ஆண் டிலிருந்து 1983ஆம் ஆண்டு வரையிலுமான 20 ஆண்டுகளில் ஆண்டொன் றிற்கு யாழ்ப்பாணத்தின் மீன் உற்பத்தி 6.6 சதவீதம் அதிகரித்து வந் திருக்கின்றது. இலங்கையின் உற்பத்தி அதிகரிப்புடன் பார்க்கும்பொழுது யாழ்ப்பாணத்தின் அதிகரிப்பு அதிகமாகவே காணப்படுகின்றது. சென்ற 5 ஆண்டு காலத்தை நோக்கும் பொழுது இலங்கையின் மீன் பிடி 5.5 சத வீதமாக அதிகரிக்க, யாழ்ப்பாணப் பகுதியின் மீன்பிடி 6.7 சதவீதமாக அதிகரித்து வந்துள்ளது.