dc.description.abstract |
பண்டைத்தமிழர் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது. வாழ்க்கை நடைமுறைகள் இயற்கை நிலைக்கேற்பவே அமைந்தன. தமது ஆற்றலுக்கு மேற்பட்டவற்றைத் தமிழர் உயர்ந்த நிலையில் வைத்து வழிபாடு செய்த னர். 'வழிபாடு'' என்னுஞ் சொல், வழியிற் செல்லுகை, பின்பற் றுகை, வணக்கம், பூசனை, வழக்கம், சமயக்கோட்பாடு எனப் பல பொருள் களைத்தரும். 1 வாழ்க்கையிலே நாம் செல்லுகின்ற திசையினைக் காட்டுவ தாக இன்று ''வழிபாடு'' கருதப்படுகின்றது. பழந்தமிழர்களது நடை முறைகளையே இன்றும் தமிழர் பெரும்பான்மையாகக் கடைப்பிடித்து வரு கின்றனர். வழிபாட்டுநிலையும் அத்தகையதே. பழந்தமிழ் இலக்கியங்கள் பழைய வழிபாட்டு நடைமுறைகளைத் தெளிவுறப் பதிவு செய்து வைத்துள் ளன. அவ்விலக்கியச் செய்திகள் எமது இன்றைய வழிபாட்டு நடைமுறை களை நாம் விளங்கிக் கொள்ளவும் நல்லுதவி புரிகின்றன.
சங்க இலக்கியத் தொகுப்பு நூலினுள் ஒன்றான பரிபாடல் தமிழர் வழிபாடு பற்றிய செய்திகளைக் கூறுகின்றது. அந்நூல் தொகுப்பு நூலாக இன்றிருப்பதால் ஆய்வுக்குரியதாகவும் உள்ளது. ''பரிபாட்டமுதம்'' எனச் சான்றோராற் புகழப்பட்ட பரிபாடல் தொகை நூல் எட்டுடன் ஐந் தாவதாக நின்று விளங்கியதை,
''நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்துங் கலியோ டகம்புறமென் றித்திறத்த எட்டுத்தொகை'' |
en_US |