Abstract:
கி. பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தொடர்பான வரலாற்றுப் போக்கினை அடையாளம் காண முடிகிறது. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து ஈழத்தில் எழுந்துள்ள இலக் கியங்களை நோக்கின் அவற்றுள் இந்துசமய இலக்கியங்கள் பெரும்பான்மை இடத்தினைப் பெற்றுள்ளமையினை அறியலாம். சமூகத்தில், சமயத்தின் பங்கும் தேவையும் சிலகாலப்பகுதிகளிற் கூடியும், சிலகாலப்பகுதிகளிற் குறைந்தும் காணப்பட்டதற்கேற்ப சமய இலக்கியங்களும் சிலகாலப் பகுதிகளிற் கூடு தலாகவும் சிலகாலப்பகுதிகளிற் குறைவாகவும் தோற்றம் பெற்றுள்ளன. எனினும் இடையீடின்றிச் சமயம் இலக்கியப் பொருளாக இடம்பெற்றே வந்துள்ளது. இவ்வகையில் ஈழத்திலே பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தோற்றம் பெற்ற இந்து இலக்கியங்களை வரலாற்றொழுங்கில் காலப்பின்னணியுடன் எடுத்து விளக்குவதே இக்கட்டு
ரையின் நோக்கமாகும்.