dc.description.abstract |
அண்மைக் காலங்களில் நிருவாகத்தில் பன்முகப்படுத்தலின் அவசியமும் தேவையும் பற்றி மீண்டும் பேசப்பட்டு வருவதைக் காண்கிறோம். இன்று கல்வித் துறையிலும் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டும், உணர்த்தப் பட்டும் வருகிறது. ஒரு காலத்தில் சில நாடுகளின் கல்வித் தொகுதிகளின் நிருவாகத் தொகுதிகளை ஒப்பீட்டு நோக்குடன் ஆராய்வதற்கு மட்டுமே இக்கருத்தும் செயன்முறையும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இன்று இதற்காக மட்டுமல்லாமல் கல்வித் திட்டமிடலிலும் நிருவாகத் திலும் சில பல மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்ற உணர் வுடன் பன்முகப்படுத்தலைச் செயற்படுத்த வேண்டும் என்று கொள்ளப்படு கின்ற து. (Mackenzie, 1975).
ஒருமுகப்படுத்தப்பட்ட அமைப்பு:
கல்வி நிருவாகம் குறிப்பாக நிறுவன மட்டத்தில் தனித்துவமாகவும், பொது நிருவாகத்தில் இருந்து சில விதிகளில் வேறுபட்டு இருந்தாலும் கல்வித்தொகுதி ரீதியாக பொது நிருவாகத்தில் அடங்கியும், அதன் தாக் கங்களுக்கு உட்பட்டும் விருத்தியடைந்து வந்து இருக்கிறது. எனவே கல்வி நிருவாகத்தின் வளர்ச்சியையும், போக்குகளையும், எதிர்காலத்தில் தேவைப்படும் மாற்றங்களையும் நோக்கும்போது பொது நிருவாகத்தின் வளர்ச்சிப் போக்குகளையும் புனரமைப்புக்களையும் கருத்தில் கொள்ளவேண் டிய தேவையை மறுக்க முடியாது. |
en_US |