Abstract:
நாணயங்களையும் வரலாற்றின் அடிப்படை ஆதாரங்களுள் ஒன்றாக வைத்து, ஆய்வு செய்து வரலாற்றினை எழுதும் கலையானது தென்னாசியா வைப் பொறுத்தமட்டில் கி. பி. 12ஆம் நூற்றாண்டளவில் காஸ்மீரில் வாழ்ந்த கல்கனர் என்ற வரலாற்றாசிரியரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆயினும் நவீன வரலாற்றியலில் அதன் உபயோகம் மிக அண்மைக்காலத் திலேயே ஐரோப்பிய நாடுகளில் உணரப்பட்டது. மறுமலர்ச்சிக்கால ஐரோப் பாவில் பரிணமித்த மனிதாபிமான இயக்கத்துடன் இந்த நாணயங்கள் பற்றிய ஆர்வமும் அவற்றினைச் சேகரித்து வைக்கின்ற முறையும் தோற்றம் பெற்றது. ஆரம்பத்தில் அவ்வார்வம் செல்வந்தர்களிடையே அழகியலையே அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், 18 ஆம் நூற்முண்டின் நடுப்பகுதி யில், வரலாற்றியலில் அவற்றின் முக்கியத்துவம் நன்றாக உணரப்பட்டத னால் நாணயங்கள் பற்றிய ஆய்வு விஞ்ஞான - தொழில் நுட்ப ரீதியிலான முறைக்கு இட்டுச்செல்லப்பட்டது. இன்று ஐரோப்பிய நாடுகளில் மட்டு மல்லாது, ஆசியநாடுகளிலும் குறிப்பாக தென்னாசியாவிற்கூட அரசியல் , சமூக, கலாச்சார வரலாறு குறித்து நாணயவியல் பற்றிய ஆய்வு புத் தூக்கத்தினைப் பெற்று வருவதனைக் காணலாம்.