dc.description.abstract |
இலங்கையில் கொழும்புக்கடுத்த பெரிய நகரங்களாக யாழ்ப்பாணம், கண்டி, காலி என்பன முக்கியம் பெறுகின்றன. யாழ்ப்பாண நகரம் குடித் தொகையில் கொழும்பு, தெகிவளை - கல்கிசைக்கு அடுத்ததாக இருப்பினும் சேவையடிப்படையில் இரண்டாவது பெரிய நகரமாகக் கருதலாம். இது 118215 (1981) மக்கள் வாழும் நகரமாக இருப்பதுடன் இலங்கைத் தமிழ் மக்களின் பிரதான நகரமாகவும், வட இலங்கையில் பிரதேச முதன்மை நகரமாகவும் விளங்குகின்றது. பெரிய நகரங்களுடன் ஒப்பிடும் பொழுது குடித்தொகைப் பருமனிலும், பரப்பிலும் சிறிய நகரமாக இருக்கிறது. ஆனால் உருவவியல் , நிலப் பயன்பாடு, நகரப் பண்புகள் அடிப்படையில் அந்நகரங்க ளில் காணப்படும் பண்புகளை இங்கும் ஓரளவு அடையாளங்காண முடிகின் றது.
யாழ்ப்பாண நகரம் 1949ஆம் ஆண்டு மாநகரசபை அந்தஸ்தைப் பெற் றது. இக்காலத்தில் இதன் பரப்பு 18. 30 சதுரக் கில்லோ மீற்றரைக் (7.75 ச. மைல்) கொண்டிருந்தது. 1968ஆம் ஆண்டின் இறுதியில் இப் பரப்பு 1.77 ச. கி. மீற்றரால் (0.75 ச.மைல்) அதிகரிக்கப்பட்டது. இவ் வதிகரிப்பு நகரின் வடமேற்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. நகரின் பரப்பு அதிகரிப்புக்குத் தென் கரையோரப்பகுதியில் நாவாந்துறை, கண் ணாபுரம், கொட்டடி, குருநகர், பாஷையூர் ஆகிய இடங்களில் கடற்கரை யோர நிலமீட்சித்திட்டத்தின் கீழ் கடனீரேரிகள் மீட்கப்பட்டுள்ளமையும் காரணமாகும். தொடர்ந்தும் இப்பகுதிகளில் கடனீரேரி மீட்கும் திட்டங் கள் நடைபெற்று வருகின்றன. இன்று நகரம் 20.07 ச.கி. மீ. (8.5 ச. மைல்) பரப்பைக் கொண்டிருப்பதுடன் நிர்வாக வசதிகருதி 23 வட்டா ரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. |
en_US |