Abstract:
தென்னாசியாவின் ஆதிமதம் இந்து மதமாகும். இப்பிராந்தியத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த பல்வேறு மொழி பேசிய மக் கள் கடைப்பிடித்த நம்பிக்கைகளே ஈற்றில் சங்கமமாகி இந்து மதமாக வளர்ச்சி பெற்றன. இவ்வாறு ஏற்பட்ட இந்து மத வளர்ச்சியில் ஒஸ்ரிக், திராவிட., ஆரிய மொழிகள் பேசியோரின் பங்களிப்பே முக்கியமானது. ஈழமும் தென்னாசியப் பிராந்தியத்தில் ஒரு அங்கமாக விளங்கியதால் இங் கும் ஆதியில் இந்து மத நம்பிக்கைகள் கால்கொள்ளத் தவறவில்லை. கி. மு. 3-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் இங்கு கால்கொண்டபோது இந்நாட்டு மதமாக விளங்கியதும் இந்து மதமே. இருந்தும் இதுபற்றி ஆராய்ந்த அதிகாரம் (Adikaram. 1946), பெச்சேட் (Bechert 1960), பரண வித்தானா (Paranavitane 1929, 1953, 1957) போன்ற அறிஞர்கள் வட இந் தியாவிலிருந்து ஈழத்தில் ஏற்பட்ட ஆரியரின் குடியேற்றத்தில் அசையாத நம்பிக்கை வைத்திருந்ததால் வட இந்தியக் கண்ணோட்டத்திற்றான் இந் நாட்டு இந்து மதம்பற்றி ஆராய்ந்தனர். இதனால் இம்முடிபுகளில் நம் நாட் டுக்குப் புவி இயல் ரீதியில் மிக மிக அண்மித்து இருக்கும் தென் இந்தியா பண்டைய ஈழ வரலாற்றில் கொண்டிருந்த பங்கு சரிவர மதிப்பிடப்பட வில்லை. ஆனால் அண்மைக் கால ஆய்வுகள் ஈழத்திலும் தென்னிந்தியாவைப் போல வரலாற்றுக் கால நாகரிகத்திற்கு வித்திட்டவர்கள் திராவிடர்களா கிய பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த மக்கட் குழுவினர் என்பதை விளக்கியுள்ளன. (Sitrampalam S. K. 1980). இவர்கள் தென்னிந்தியா வைப் போன்று இங்கும் விவசாயம், நீர்ப்பாசனம், வியாபாரம் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய வளர்ச்சிதான் இங்கு கி. மு. 3-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் கால்கொண்டபோது தனி அரசு ஒன்றும் வளர்ச்சி பெறுவதற்குக் காரணமாக அமைந்தது.