Abstract:
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் உள்ள மக்களில் பெரும் பான்மையினர் விவசாயத்திலேயே ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தமது உற் பத்தியை அதிகரிப்பதற்குக் காணப்படும் பல்வேறு தடைகளில் நிதிப் பற்றாக்குறை என்பது முக்கியமானது. பல விவசாயிகள் கிராமத்தில் வட்டிக்குக் கடன் கொடுப்போரின் பிடியில் சிக்கி உள்ளனர். அண்மைக் காலத்தில் அவ்விவசாயிகளுக்கு நிதிவசதியினை அளித்து கிராமியக்கடன் கொடுப்போனின் பிடியில் இருந்து விவசாயியை விடுவிப்பதற்கு அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் அரசாங்கங்கள் நிறுவனரீதியாகக் கடன் வழங் கும் மூலாதார வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றன. இலங்கை யும் 1960 ஆம் ஆண்டுக்குப்பின்னர் உள்நாட்டு விவசாயத்துறைக்குக் கடன் வழங்குவதற்குப் பல நிறுவனரீதியான கடன் வசதித்திட்டங்களை உருவாக்கி உள்ளது. அத்தகைய திட்டங்கள் மூலம் வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்கள், அரசாங்கத்திணைக்களங்கள் ஊடாக நெல், மற்றும் உபஉணவுப் பயிர்களை உற்பத்தி செய்வோருக்குக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
அண்மைக்காலத்தில் இலங்கையில் நிறுவனரீதியான கடன் வசதித் தன்மைகள் பல்வேறு வகைகளில் அதிகரித்தபோதும் விவசாயிகளுக்கு வழங்கிய கடன்களைத் திரும்பப் பெறுவதில் வங்கிகள் பிரச்சனையை எதிர் நோக்குகின்றன. பல்வேறுவகையான காரணிகளால் விவசாயிகள் பெறு கின்ற கடன்களில் பெரும்பகுதி திரும்பச் செலுத்தப்படுவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்கட்டுரையானது இலங்கையில் உபஉண வுப்பயிர்களை உற்பத்தி செய்வோர் பெறும் கடன் வசதிகளைப் பற்றி ஆராய்கிறது. இக்கட்டுரை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. முதலாவது பிரிவு இலங்கையின் உள்நாட்டு விவசாயத்துறையில் உபஉண வுப் பயிர்கள் பெறும் முக்கியத்துவம் பற்றிக் கூறுகின்றது. இரண்டாவது பிரிவு உபஉணவுப் பயிர்ச்செய்கையினை மேற்கொள்வோர் பெறக்கூடிய கடன் வசதிகள் பற்றிக் குறிப்பாக இலங்கையின் நிறுவனரீதியான கடன் மூலாதாரங்களின் வளர்ச்சி பற்றி ஆராய்கிறது. மூன்றாவது பகுதி உப உணவுப் பயிர்ச்செய்கைக்காக நிறுவன ரீதியான மூலாதாரங்களினால் வழங்கப்பட்ட கடன் பற்றியும் நான்காம் பகுதி விவசாயிகள் பெற்ற கடனில் திரும்பச் செலுத்தாத பகுதி பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் ஆராய்கின்றது.