Abstract:
அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தனியார் முதலீட்டினை தமது பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றன. இலங்கையில் 1977ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார கொள்கைகள் தனியார் முதலீட்டு மட்டத்தினை தீர்மானிப்பதில் கணிசமான பங்கினை வகித்துள்ளது. இவ்வாய்வானது இலங்கையில் பொருளாதாரத்தில் 1977இன் பின்னரானமொத்த உள்நாட்டு முதலீட்டில் சாராத மாறிகளான தனியார் முதலீடு, பொது முதலீடு, நாணயமாற்று வீதம், வட்டி வீதம் மற்றும் பணவீக்கம் போன்றன எவ்வாறன தாக்கத்தினைச் செலுத்துகின்றன. என்பதனை மதிப்பீடு செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்விற்கு 1977 தொடக்கம் 2016 வரையுள்ள காலத்தொடர் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட பொருளாதார மாறிகள் தனியார் முதலீட்டின் மீதான தாக்கத்தினை மதிப்பீடு செய்வதற்கு பன்மடங்கு பிற்செலவு அணுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. மாதிரியுருக்க ளினை மதிப்பிடுவதற்காக சாதாரண இழிவுவர்க்க மதிப்பீட்டு முறை (OLS) பயன்படுத்தப் பட்டது. தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கு EViews 9 பொருளியளவை கணினி மென்பாகப் பொதிகள் பயன்படுத்தப்பட்டது. இலங்கையில் மொத்த உள்நாட்டு முதலீட்டினை தீர்மானிப்பதில் பேரின பொருளாதார மாறிகளில் நாணயமாற்று வீதம், பணவீக்கம் மற்றும் வட்டி வீதம் தவிர்ந்த ஏனைய மாறிகள் புள்ளிவிபரரீதியாக பொருளுள்ள வகையில் நேர்க்கணியத் தாக்கத்தினை கொண்டுள்ளது என்பதனை அனுபவரீதியான ஆய்வு காட்டுகின்றது. இருப்பினும் இத்தாக்கமானது குறிப்பிட்ட சில வருடங்களின் பின்பே பேரினப் பொருளாதார மாறிகளின் மீது செல்வாக்கினைச் செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவ்வாய்வு இலங்கையில் முதலீட்டின் மூலம் எதிர்பார்க்கப்படும் முழுமையான பலனை அடைந்து கொள்வதற்கு முதலீட்டினை கவர்வதில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பொருத்தமான துறைகள் என்பன அடையாளம் காணப்பட்டு சிபார்சுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.