Abstract:
சுற்றுலா என்பது பொழுதுபோக்கிற்கும் கலாசார தேவைகளை நிறைவேற்றுவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் அவசியமாக காணப்படுவதுடன் சமூக பொருளாதார அபிவிருத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது. அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் யுத்தத்தின் பின் சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்து கொண்டிருக்கும் வேளையில் யாழில் பல எண்ணிக்கையான விடுதிகளும் அதிகரித்தன. இவ்விடுதிகள் அதிகரித்த நிலை, யுத்தத்தின் பின் சுற்றுலா விடுதிகளின் வசதிகளின் வளர்ச்சி, சுற்றுலா விடுதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற வினாக்களை உள்ளடக்கியதாக யாழ் வலிகாமப் பிராந்தியத்திலுள்ள முதன்மையான 9 சுற்றுலா விடுதிகள் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டன. இவ் விடுதிகளின் அறை எண்ணிக்கையின் வளர்ச்சி, அறையின் வசதி, மண்டப வசதி, ஊழியர், பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர், சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலாப் பயணிகளின் வருகை, பொழுதுபோக்கு வசதி, போக்குவரத்து வசதி, உணவு, உணவு வழங்கல் , அறைகளின் வாடகை , சுற்றுலா விடுதிகளின் மொழி வளர்ச்சி போன்ற விடயங்களையும் சுற்றுலா விடுதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகும். இச்சவால்களை வெற்றி கொள்வதற்கான பரிந்துரைகளும் இவ் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.