Abstract:
இலங்கையில் தமிழ்மொழி பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வருவதனால் சிறப்பான இயல்புகளையும் கிளைமொழி வேறுபாடுகளையும் கொண்டு காணப்படுகின்றது. யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், மலையகத் தமிழ், இஸ்லாமியத் தமிழ் என வேறுபடுகின்றது. இவ் வேறுபாடுகள் நிலப்பரப்பு, மொழி வகை , பழக்கவழக்கங்கள், சடங்கு முறைகள், உறவு முறைகள், நம்பிக்கைகள், மக்கள் நோக்குகள், தொடர்புகள் போன்றவற்றிற் கிடையே காணப்படும் வேறுபாடுகளினால் உருவானதாகும். யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் வழக்கு தராதர வழக்காகவும், பல சிறப்பியல்புகளையும், புதுமைகளையும் கொண்ட வழக் காகவும் காணப்படுகின்றது என அறிஞர்களும் ஏற்றுக்கொள்கின்றார்கள். இவ் வழக்கில் எத்த னையோ சொற்கள் வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஒரு பொருளை உணர்த்த ஒரு குறிப்பிட்ட காலத்தில் வழங்கப்பட்ட சொல் காலப்போக்கில் இழக்கப்பட்டுப் போதல் வழக்கி ழத்தல் எனப்படும். வழக்கொழிந்து போகும் உறவுப் பெயர்களையும் அதற்கான காரணங்களையும் கருக்கமாக விளக்குவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். கள ஆய்வு மூலம் திரட்டிப் பெறப்பட்ட தரவுகள், பேரகராதி, நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் முதலியன பயன்படுத்தப்பட்டதனூடாக இந்த ஆய்விற்கான தரவுகள் திரட்டப்பட்டுள்ளன.