Abstract:
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையானது பன்மைத்தன்மை கொண்ட, முரண்பாடுகளை யுடைய ஒரு சமுதாய அமைப்பிற்கு மிகவும் பொருத்தமானதாகக் கருதப்படுகின்றது. இவ் ஆய்வானது இப் பிரதிநிதித்துவமுறை உருவாக்கத்திற்கான பல்வேறு பின்னணிகள் பற்றியும், அதன் வெவ்வேறு வகைகள் பற்றியும் கோட்பாட்டு , மற்றும் நடைமுறை ரீதியான அணுகு முறைகளைக் கொண்டுள்ளது. இங்கு ஒவ்வொரு தேர்தல் முறைகளதும் தன்மைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன் அவை பற்றிய மதிப்பீட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கின்றது